பங்குத்தந்தையிடமிருந்து...
கூடலம்பதி வாசம்! குண்டுமல்லி வாசம்!
புனித சூசையப்பரின் சுந்தரப் பிள்ளைகளே, மேலும் வாசிக்க

1969-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி தொடங்க, மீதம் தேவைப்பட்ட பணத்திற்கு, தங்களது தங்க நகைகளை கழட்டிக் கொடுத்த, எம் கூட்டப்புளி ஊர் பெண்கள்தம் பாதம் பணிகிறோம். மேலும் வாசிக்க

அருட்திரு. மரிய சேவியர் ராஜா அடிகளார்,
உதவி பங்குத்தந்தை, 

கூட்டப்புளி.

கூட்டப்புளி ஊர் தோன்றிய காலக்கட்டம்:

தற்பொழுது கூட்டப்புளி ஊர் அமைந்துள்ள இடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீரால் சூழப்பட்டிருந்தது. புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாம் இன்றும் காண்கின்ற சிப்பிகள் இதற்கு ஆதாரமாகின்றன. புயல்காற்று பலதரம் வீசி மணல் திட்டுக்களை ஏற்படுத்தியதன் காரணமாக கடல் உள்வாங்கிக் கொண்டது. கடல் உள்வாங்கி நிலப்பரப்பு ஏற்பட்டபின், அந்தக் காலத்தில் திருமறையைப் போதிக்க வந்த இயேசு சபை அருட்பணியாளர்கள் கடற்கரைக் கிராமங்களில், பாதுகாப்பின்றி ஆங்காங்கே சிதறிக்கிடந்த கத்தோலிக்க மீனவக் கிராமக் குடும்பங்களை கூட்டப்புளிக்கு அழைத்து வந்து குடியமர்த்தினர் என்று வரலாற்றுச் சுவடிகள் கூறுகின்றன.
இது எந்தக் காலக்கட்ட நிகழ்வுகள்? இந்த நிகழ்வுகளுக்கு முன்னால் கூட்டப்புளி என்றொரு ஊர் இருந்ததா? அப்படி இருந்ததென்றால் எந்தப் பகுதியில் இருந்தது? என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு தமிழக அரசியல் நிலைப் பற்றியும், முத்துக்குளித்துறையின் வேதபோதகப் பின்னணிகளைப் பற்றியும் தெரிந்திருப்பது அவசியமாகிறது.

புனித சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் திருமறையைப் போதித்த காலக்கட்டத்தில் (அக்டோபர் 1542 லிருந்து செப்டம்பர் 1543க்குள்) மணப்பாடிலிருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக பெருமணலை அடுத்த பரவர் கிராமமான கூட்டப்புளிக்கு வந்தார் என்றொரு தகவல் நமக்குக் கிடைக்கிறது. எனவே செப்டம்பர் 1543 ஆம் ஆண்டுக்கு முன்பே கூட்டப்புளி ஊர் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
1571 ஆம் வருடத் தகவல்படி திருவாங்கூர் சமஸ்தான ஆட்சி எல்கையையும், மதுரை நாயக்கர்களின் ஆட்சி எல்கையையும் பிரிக்கும் இடமாக கூட்டப்புளி இருந்தது. இதன் காரணமாக கடற்கரைக் கிராமங்களில் கூட்டப்புளி முக்கியமான அந்தஸ்தைப் பெற்றிருந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

*முத்துக்குளித்துறை பரவ மீனவர்கள், தமிழகத்தை ஆண்ட இந்து மன்னர்களாலும் முகமதியர்களாலும் துன்புறுத்தப்பட்ட காலக்கட்டம் (1544-1597)

***1544 ஆம் ஆண்டு வெட்டும்பெருமாள் என்ற இந்து அரசன் கன்னியாகுமரியைத் தாக்கினான். புனித சவேரியார் கன்னியாகுமரி மக்களை மீட்டு மணப்பாட்டில் தங்க வைத்தார்.

***1551, 1553, 1560 ஆம் ஆண்டுகளில் புன்னக்காயல் தாக்கப்பட்டது.

*மணப்பாட்டுக்கு வடக்குப் பகுதியிலுள்ளவர்கள் மன்னாரில் (இலங்கை) குடியேறினர். கொள்ளை நோய் தாக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் மடிந்ததினால் 1564 ஆம் ஆண்டு, பெரும்பாலானோர், தங்கள் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.
இவர்களுடைய வழிவந்த பரதகுல மக்கள் இன்றும் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதைக் காண்கிறோம்.
16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயாபதியைத் (இடிந்தகரைக்கு வடக்குப் பக்கம்) தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட ஆரியப்பெருமாள் உவரியைத் தாக்கி, உவரியின் முக்கியமான ஆண்களைச் சிறைப்பிடித்தான். பெண்களை நிர்வாணமாக்கி, அவர்கள் தலைமுடியைக் கொண்டே, இருவர் இருவராகக் கட்டி, ஆட்டு மந்தைப் போல் தன் அரண்மனைக்கு ஓட்டிச் சென்றான் என்று கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலைக் கண்டு வெகுண்டெழுந்த பக்கத்து கடற்கரைக் கிராமங்களைச் சார்ந்த பரத இளைஞர்கள் பலர் ஒன்று திரண்டு ஆரியப்பெருமாளையும், அவனுடைய அடியாட்களையும் தாக்கி மேலும் பலரையும் வெட்டிச்சாய்த்ததாகவும் அறிகிறோம்.

மேலும் வாசிக்க ...

திருவழிபாடு விவரம்

 வார நாட்கள்  காலை மாலை 
ஞாயிறு

முதல் திருப்பலி: 5:00 மணி

2-வது திருப்பலி: 7:00 மணி

3-வது திருப்பலி: 9:00 மணி (English Mass)

திருப்பலி காலை 6:00 மணி (பரிசுத்த உபகார மாதா ஆலயம் - கன்னங்குளம்)

 

நற்கருணை ஆசீர்: 6:30 மணி

 

 
 திங்கள்

திருப்பலி: 5.40 மணி

 
 செவ்வாய்

திருப்பலி: 5.40 மணி

 

முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய் - திருப்பலி:6:30 மணி

( புனித அந்தோனியார் சிற்றாலயம் - சுனாமி நகர்) 

 புதன்

திருப்பலி: 5.40 மணி

(புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி)

 திருப்பலி: 6:30 மணி

(புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி)

 வியாழன்

திருப்பலி: 5.40 மணி

 கடைசி வியாழன் - திருப்பலி: 6:30 மணி

(குழந்தை இயேசு கோவில் - ஜெயமாதாபுரம்)

 வெள்ளி

திருப்பலி: 5.40 மணி

முதல் வெள்ளி - திருப்பலி: 5.40 மணி

(திருச்சிலுவை சிற்றாலயம்)

முதல் வெள்ளி - 6:30 மணி

இறைஇரக்க நவநாள் ஆராதனை

 

கடைசி வெள்ளி - திருப்பலி: 6:30 மணி

(புனித ஜார்ஜியார் சிற்றாலயம்)

 
 சனி

திருப்பலி: 5.40 மணி

முதல் சனி - திருப்பலி: 5.40 மணி

(பரிசுத்த பாத்திமா மாதா கெபி)

முதல் சனி  : 6:30 மணி - ஜெபமாலை, தேவ மாதா சப்பர பவனி மற்றும் நற்கருணை ஆசீர்

 

கடைசி சனி - திருப்பலி: 6:30 மணி 

(தூய வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்)

 

 

குறிப்பு:

1. ஞானஸ்நானம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொடுக்கப்படும்.

2. வாரநாட்களில் தினமும் திருப்பலிக்கு முன் காலை 5:00 மணிக்கு நற்கருணை ஸ்தாபகம் வைக்கப்பட்டு 5:30 மணிக்கு நற்கருணை ஆசீர் வழங்கப்படுகிறது.

 

பங்கு அலுவலக நேரம் :

காலை 9:30 முதல் மதியம் 1:00 வரை
மாலை 3:30 முதல் 5:30 வரை
ஞாயிறு விடுமுறை
தொலைபேசி : 04637 - 257 150
மின்னஞ்சல் : koodalooruni@gmail.com

 

 

தலைமை ஆசிரியர்களின் வரிகள்

சாதனையாளர்கள்

 • ahilan.jpg
 • akhil.jpg
 • Armstrong.jpg
 • Arockiamj.jpg
 • Chezhiyan.jpg
 • Immaculate.JPG
 • johnabthas.jpg
 • Josephine-1.jpg
 • josephjohn.jpg
 • Joyce.jpeg
 • jude.jpg
 • kennedy-1.jpg
 • Kennedy.jpeg
 • leon-1.jpg
 • Mrs.-JENIFER-MADAM.jpg
 • sobers.jpg
 • Vanitha-1.jpg
 • Varunya.jpg