பக்தி சபைகள் 

1. பாலர் சபை

ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாற்ற ஜெபம், தபசு மற்றும் பொருளுதவி செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டில் 1845-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1922-ஆம் ஆண்டில் பாப்பரசரின் நேரடி நிர்வாகத்தில் “பாப்புவின் சபை” என்று உயர்த்தப்பட்டது. நமது ஊரில் இச்சபை 1936-ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.

சின்னஞ்சிறு குழந்தைகளிடம் அன்பும் பரிவும் காட்டி, நல்லகுணம் மற்றும் பண்பாடு உள்ளவர்களாக உருவாக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே இறைவேண்டல், ஒறுத்தல், காணிக்கை, தியாக மனப்பான்மை ஆகியவை இச்சபைக் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப் படுகிறது.

நமது பங்கில் ஆண்டுதோறும் பெப்ருவரி மாதம் இரண்டாம் ஞாயிறன்று இச்சபையின் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

2. புனித குழந்தை தெரசம்மாள் சபை

கிறிஸ்துவை மையமாகக் கொண்டு வாழ்விலும், இறைவழிபாட்டிலும், பக்தியிலும், சேவை மனப்பான்மையிலும் முன்னேறுவது இச்சபையின் இலக்கு. 6-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இச்சபையின் உறுப்பினர்கள். சபையின் பாதுகாவலி புனித தெரசம்மாள் போன்று வாழ்வின் சிறுசிறு நிகழ்வுகளை இயேசுவுக்கு ஒப்புக்கொடுப்பது, பக்தியுடன் இறைவழிபாட்டில் பங்கேற்பது இச்சபையின் ஒழுங்குகள். ஆலயத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது இவர்களின் மேலானப் பணி. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் இச்சபையின் விழா கொண்டாடப்படுகிறது.

3. தோமினிக் சாவியோ சபை

புனித தோமினிக் சாவியோ போன்று இளம் வயதிலேயே, இறைப்பற்றுடனும், சேவை மனப்பான்மையுடனும் வாழ இச்சபை பயிற்றுவிக்கிறது. 6-வது முதல் 10-வது வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இச்சபையின் உறுப்பினர்களாக உள்ளனர்.

4. அமலோற்பவ மாதா சபை

5. மரியாயின் சேனை (ஆண்கள் / பெண்கள்)
6. திருக்குடும்ப சபை
7. வின்சென்ட் தே பவுல் சபை (ஆண்கள் / பெண்கள்)
8. உத்தரிக்கிற ஆத்துமாக்கள் சபை (ஆண்கள் / பெண்கள்)
9. வியாகுலமாதா சபை (ஆண்கள் / பெண்கள்)

இயக்கங்கள்

1. வெண்லில்லி விளையாட்டுக்குழு
2. பிரிட்ஸ்