அறிவியல் ஆய்வுக் கூடம்


இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு சேர்ந்து ஒரு அறிவியல் ஆய்வுக் கூடம் உள்ளது. இங்கு போதுமான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் உள்ளன.

நூல் நிலையம்


எங்கள் பள்ளி நூலகத்தில் 3,500க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.
பள்ளி மாணவ மாணவியர்களுக்குப், பள்ளி நாட்களில் புத்தகங்கள், மாலை 4:30 மணிக்கு மேல் வழங்கப்படும். தாங்கள் பெற்றுக்கொண்ட புத்தகங்களை, ஒரு வாரத்திற்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறுபவர்கள் தண்டனைக்கு உரியவராவார். புத்தகங்களைச் சேதமாக்குபவர்களுக்கும், தவறவிடுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். மாணவர்கள் தமக்குள் புத்தகங்களை மாற்றிக் கொள்வதோ, பிறருக்கு இரவல் அளிப்பதோ கூடாது.


விளையாட்டுகள்


பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே பரந்து விரிந்த, சுற்று வட்டார ஊர்களிலேயே இல்லாத, மிகப்பெரிய விளையாட்டு மைதானம், தடகளப் போட்டிகளுக்கு பயிற்சி பெறப் போதுமான இடவசதியுடன் உள்ளது.
சனிக்கிழமைதோறும் அனைவருக்கும் பொது உடற்பயிற்சி (Mass Drill) நடைபெறும். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், 75% நாட்கள் உடற்பயிற்சி வகுப்புகளுக்கு வராவிடில், மேல் வகுப்பிற்குச் செல்லத் தகுதியற்றவர் ஆவர்.


பள்ளியின் இதரச் செயல்பாடுகள்


நம் பள்ளியில் கீழ்க்காணும் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
1. நாட்டு நலப்பணித்திட்டம்
2. இலக்கிய மன்றம் ( தமிழ் மற்றும் ஆங்கிலம்)
3. சாரணர் பயிற்சி
4. நுகர்வோர் இயக்கம்
5. செஞ்சிலுவைச் சங்கம்
6. இளங்கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
7. பசுமைப் படை,
8. அறிவியல் கழகம்,
9. மறைக்கல்வி மன்றம்