தலைமை ஆசிரியரிடமிருந்து...

10-04-1942-ஆம் ஆண்டு எம் பள்ளி அரசின் நிரந்தர அங்கிகாரம் (அங்கிகார எண்: LDIS C2(25) நாள்:10-04-1942) பெற்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


“இறையருளோடு உழை” என்பதே எம் பள்ளியின் விருதுவாக்கு. 5 ஆசிரியர்கள் எம் பள்ளியில் பணிபுரிகிறார்கள். ஆசிரியர்கள், மாணவர்களின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்து, எம் பள்ளியையும் மாணவர்களையும் வெற்றிப்பாதையில் நடத்திச் செல்கின்றனர்.

“நியுபடகாஜி” முறையில் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

ஒவ்வொரு வகுப்பிற்கும், ஒரு பருவத்திற்கு இரண்டு தேர்வுகள் வைத்து, மதிப்பெண் அட்டைகள் பெற்றோரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு, மாணவர்களின் தரத்தை பெற்றோர்கள் அறியச் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, படிப்பில் முதல் இடமும் இரண்டாம் இடமும் பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வியில் ஆங்கிலத்தின் தனித்தன்மையை உணர்ந்து, அதைக் கருத்தில் கொண்டு, எம் மாணவர்களுக்கு தனி ஆசிரியரைக் கொண்டு ஆங்கிலப்பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை பள்ளிப்பேரவை நடத்தப்படுகிறது. பேரவைக்குப் பின் 30 நிமிடங்கள் மறைக்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெள்ளிக்கிழமை தோறும், காலை பள்ளிப்பேரவையில், 30 நிமிடம் தியானம் நடைபெறுகிறது.

திருமதி. அ.பிளெய்ஸி,
தலைமையாசிரியை,
புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி,
கூட்டப்புளி-627127.