பள்ளிப் பாடல்
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்,
என்றும் தழைத்திடவே !
உண்மையும் ஒளியும், பொழியும் இறைவன்,
அருளுடன் உழைத்திடுவோம் !
தூய்மையும் கல்வியும், துணிவுடன் போற்றி,
வளன் அருள் பாடிடவே !
திண்ணிய கல்வியைத், திறனுடன் கற்றுத்,
தண்டமிழ்ப் பண்ணிசைப்போம் !
அஞ்சாமை அறிவும், எஞ்சாமை பெற்றுத்,
தீண்டாமை ஒழித்திடவே,
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”
தமிழ் நெறி நின்றிடுவோம் !
அன்பும் அறனும், என்றும் நிலைத்து,
ஒற்றுமை ஓங்கிடவே,
கூடற்பதியில், கூடிடும் மாணவர்,
இறையடி போற்றிடுவோம் !
satta king