தலைமை ஆசிரியரிடமிருந்து...
19-12-1921-ம் ஆண்டு, அரசு அங்கீகாரம் பெற்று, 98வது அகவையில் நடைபயில்வது எம் பள்ளி. "இறையருளோடு உழை" என்ற விருதுவாக்குடன் செயலாற்றுகிறது. இறை ஞானம், கல்வி ஞானம், கலை ஞானம் புகட்டப்படுகிறது. ஐந்து ஆசிரியப் பெருமக்கள் பணிபுரிகின்றார்கள். 121 மாணவிகள் பயன் அடைகின்றார்கள். பள்ளிக் கட்டணமின்றி, கூடல்நகர் கொடை உள்ளங்களின் ஈகையால், தரமான Spoken English வகுப்பு நடைபெறுகிறது. பரதம், Drawing கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவ்வப்போது, போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
இவ்வாறு, வளனாரின் பாதுகாவலில், அன்னையின் பரிந்து பேசுதலால் சிறப்பாக இயங்குகிறது.
சகோ.அருள் மலர்,
தலைமையாசிரியை,
புனித மரியன்னை தொடக்கப் பள்ளி,
கூட்டப்புளி.