பொதுவிதிகள்
1. மறைக்கல்வியும் நல்லொழுக்கமும்
2. பள்ளி வருகை
பள்ளி ஒழுக்க விதிகள்
1. மாணவர்கள் ஆசிரியர்களையோ அல்லது குருக்களையோ சந்திக்கும்போது ‘வணக்கம்’செலுத்த வேண்டும்.
2. வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், மாணவர்கள் ஆசிரியர்க்கு வணக்கம் தெரிவித்து, அவர் பணிக்குந்தனையும் நின்று, பின்னர் அவரவர் இருக்கையில் அமர வேண்டும்.
3. பாடவேளையில் ஆசிரியரின் அனுமதியின்றி, மாணவர்கள் எவரும் வகுப்பறையை விட்டு வெளியே செல்லக் கூடாது.
4. மாணவர்கள் வகுப்புக்குச் சுத்தமான சீருடை அணிந்து வருதல் வேண்டும்.
5. மாணவர்கள் தாம்தாமே நல்லொழுக்கமாய், இந்தியப்பாணியில் நடந்து கொள்ள வேண்டும்.
6. மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் தவிர, ஏனைய நாட்களில் காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரையும், மாலையில் 5:30 மணி முதல் 8:00 மணி வரையும், தனிப்படிப்பு (Study) நடைபெறும். முன் அனுமதியின்றி வரத்தவறுபவர்கள் தண்டனைக்கு உரியவராவார்கள்.
7. தனிப்படிப்பு முடிந்து வீட்டிற்குச் செல்கையில், அமைதியாகச் செல்ல வேண்டும்.
8. பள்ளிச்சுவர்கள், பெஞ்சு, டெஸ்குகள் மீது எழுதவோ, சேதப்படுத்தவோ கூடாது. துண்டுக் காகிதங்களை எறிவதோ, சிதறுவதோ கூடாது.
9. மாணவர்கள் கல்வி நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசு விடுதிகளில் அல்லது பெற்றோர் வசிக்கும் இடங்களிலிருந்து மட்டுமே, நேரடியாகப் பள்ளிக்கு வர வேண்டும்.
10. தலைமையாசிரியரின் முன் அனுமதியின்றி, மாணவர்கள் தங்களிடையே எக்காரணங்களுக்கும் பணம் வசூலிக்கக்கூடாது.
11. மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும், தங்களது கையேட்டை மாற்றம் செய்யக்கூடாது.
நன்றி - மாணவர் கையேடு 2018-2019
பெற்றோருக்கு வேண்டுகோள்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பான, எல்லாக் கடமைகளையும், பொறுப்புகளையும், பள்ளி அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது சுமத்த முடியாது. ஓரளவே ஆசிரியர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஆதலின், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஒழுக்கம், பண்பாடு, அறிவு வளர்ச்சி ஆகியவற்றில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கும், இரவுப்படிப்புக்கும் தவறாது வருகை தர, பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மேலும், அடிக்கடி பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் அதிகாரிகளையும், ஆசிரியர்களையும் சந்தித்துத் தங்கள் பிள்ளைகளின் தேர்ச்சியையும், ஒழுக்கத்தையும் பற்றி அறிதல் வேண்டும்.