புனித மரியன்னை தொடக்கப்பள்ளி slide

புனித மரியன்னை தொடக்கப்பள்ளி

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் எம் பள்ளி, கூட்டப்புளியின் பங்குத்தந்தை அவர்களை தாளாளராகக் கொண்டு செயல்படுகிறது.

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அன்றைய அருட்தந்தையர்களின் பெரும் முயற்சியால் “R.C. பெண் பாடசாலை” என்ற பெயரில் எம் பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதிவேடுகள் சிலவற்றைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் சரியான காலத்தைக் கணிக்க முடியவில்லை. எம் பள்ளியிலுள்ள சில பதிவேடுகளில் காணப்படும் தகவல்களின்படி, 1894-ஆம் ஆண்டுக்கு முன்னரே எம் பள்ளி தொடங்கப்பட்டிருக்கிறது. காரணம் 13-04-1894ல் ஒரு மாணவி சேர்க்கப்பட்டிருக்கிறார். 1907-ஆம் ஆண்டில் திரு. டீ.ஆறுமுக நாயகம் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 1908-ஆம் ஆண்டு முதல் வியாகுலமாதா சபை கன்னியர்களின் மேற்பார்வையில், அந்தக் கன்னியர்களில் ஒருவர் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுகாலம்வரை இப்பள்ளியைச் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்கள்.

1921-ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக்கூடம் “திருச்சிலுவைப் பாடசாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின், 1921-ஆம் ஆண்டு உயர் தொடக்கப்பள்ளியாக விரிவுபடுத்தப்பட்டு 1931-ஆம் ஆண்டு வரை 7-வது வகுப்பு வரை இருந்துள்ளது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஏதோ காரணத்தால் இப்பள்ளியில் வகுப்புகள் குறைக்கப்பட்டு 5 வகுப்புகளுடன் “புனித மரியன்னை தொடக்கப்பள்ளி” என்று பெயர் மாற்றப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.