புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி Slide

புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் எம் பள்ளி, கூட்டப்புளியின் பங்குத்தந்தை அவர்களை தாளாளராகக் கொண்டு செயல்படுகிறது.

R.C. துவக்கப்பள்ளியாக 1883-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எம் பள்ளி, 10.04.1942ல் நிரந்தர அங்கீகாரம் பெற்று புனித சூசையப்பர் ஆரம்பப்பள்ளி என்ற பெயரில் இயங்கி வருகிறது.

திரு. நட்சத்திரம் கோமஸ், திரு. D. ஞானப்பிரகாசம் லியோன், திரு. T.S. பவுல் பர்னாண்டோ போன்றவர்களால் தலைமை ஏற்று நடத்தப்பட்ட எம் பள்ளிக்கு 1937-ல் அழகப்பப்புரத்தைச் சார்ந்த திரு. மரியஞானம் அவர்கள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறார். 7 வகுப்புகளை மட்டுமே கொண்டு நடத்தப்பட்ட எமது பள்ளி, பலரின் முயற்சியால் 1937ல் 8-ஆம் வகுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அந்தக் காலக்கட்டத்தில் கல்வி பயின்ற எம் ஊர் முதியவர்கள், மாணவர்களின் கல்விக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட, திரு. G. அந்தோனி குருஸ் கர்டொசா, திரு. D. பிலமின் லியோன் என்ற இரு ஆசான்களையும் இன்னும் நினைவில் நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் கல்விப்பணி மட்டுமின்றி ஆலயப்பணியும் செய்து ஊருக்காகவே உழைத்த உத்தமர்கள்.

தலைமை ஆசிரியர் திரு. மரிய ஞானம் அவர்களுக்குப் பின், தலைமை ஆசிரியர்களாக 1967-73 வரை திரு. D. மரிய மிக்கேல் என்பாரும், 1973-88 வரை திரு. T. சந்தக்குருஸ் என்பாரும், 1988-94 வரை திரு. ஜூலியான் கர்டோசா என்பாரும் 1994-2003 வரை திருமதி. A. ரூபின் யூஜின் என்பாரும் அதன்பின் திருமதி. S. ஜோஸ்பின் சந்திரா என்பவர் தலைமை ஆசிரியையாகவும் பணிபுரிந்துள்ளனர்.

2008-ஆம் ஆண்டில் 125வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது.